Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை – திருமதி மாலினி முரளிதரன்

ஜனவரி 12, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

உளுந்து அறுவடை தொடர்பில் இன்று (12.01) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024-2025 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் பெரும் போகத்தில் 5650 ஹெக்டேயர் அளவில் வவுனியா மாவட்டத்தில் உளுந்து செய்கை பண்ணப்பட்டது. வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் தற்போது உளுந்து அறுவடையை மேற்கொள்கிறார்கள். அவர்களுக்கு தற்போது உரிய விலை கிடைக்கவில்லை என்பது குறையாகவுள்ளது. உண்மையில் அறுவடைக் காலத்தில் விற்பனைக்கு கொண்டு செல்லும் போது விலை குறைவாக தான் இருக்கும். உளுந்தை பத்திரமாக வண்டு மற்றும் பூச்சி தாக்கம் இல்லாது பாதுகாக்க வேண்டும்.

விலை அதிகரிக்கும் காலங்களில் அதனை விற்பனை செய்ய வேண்டும். காற்று புகாவண்ணம் 300 கேச் தடிப்புள்ள பொலித்தீனில் பொதி செய்து வைத்திருக்க முடியும். அல்லது 5 லீற்றர் குடிநீர் வரும் போத்தலில் கூட உளுந்தைப் போட்டு பாதுகாப்பாக மூடி வைக்க முடியும். அரசாங்கம் உளுந்திற்கான விலை தொடர்பில் கவனம் செலுத்தி வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை!
அடுத்த செய்தி செட்டிநாடு ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க….

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆகஸ்ட் 11, 2026
இலங்கை

யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விவசாயிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து அவற்றிற்கு தீர்வு காணும் முயற்சி.

பிப்ரவரி 21, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கட்சிக்கு எதிராக செயற்பட்டோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை

ஜூலை 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு நிவாரணம்!

ஜூலை 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?