தமிழகத்தின் பாரம்பரியமான இனிப்பு வகைகளில் ஒன்று இந்த ‘பால் கொழுக்கட்டை’. இது பாரம்பரிய செட்டி நாட்டு உணவு வகைகளில் ஒன்று… பால் கொழுக்கட்டையை தேங்காய் பால், பசும் பால், மற்றும் சர்க்கரை சேர்த்தும் செய்யலாம். இதில் தேவைப்பட்டால் வெல்லம் கூட சேர்க்கலாம்..
பால் மற்றும் அரிசி மாவு வைத்து தயாரிக்கப்படும் இந்த கொழுக்கட்டை அதன் கிரீமி சுவைக்காக அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த பால் கொழுக்கட்டையானது பொதுவாக விநாயக சதுர்த்திக்கு செய்வார்கள்.. அதேபோல் பெரும்பாலா தென்னிந்திய வீடுகளிலும் இது அடிக்கடி செய்யப்படுகிறது. தேங்காய் பால் கொழுக்கட்டை செய்வது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
தேவையான பொருள்கள்
1. பச்சரிசி மாவு
2. பால்
3. வெல்லம்
4. நெய்
5. துருவிய தேங்காய்
6. ஏலக்காய்
7. குங்குமப்பூ
8. தண்ணீர்
செய்முறை
1. முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு ஊற வைத்து மண் இல்லாமல் வடிகட்டவும்.
2. பிறகு ஒரு கனமான பாத்திரத்தில் ஒரு பகுதி கரைந்த வெல்லத்தை மட்டும் எடுத்து நன்கு கொதிக்கவிடவும். (மீதி வெல்லத்தின் நீரை வைத்துக் கொள்ளவும். தேவைப்படும்)
3. வெல்லம் நன்கு கொதிக்கும் சமயத்தில் அதனை நன்கு கிண்டி தேங்காய்த் துருவல், ஏலப் பொடி, நெய் இவற்றை எல்லாம் போட்டுப் பின்னர் அரிசிமாவையும் போட்டு, விடாமல் சுமார் 5 நிமிடங்கள் கெட்டியாக கிளறிக் கொண்டே இருக்கவும்.
4. கெட்டியாக வந்த மாத்திரத்தில் இந்த மாவை சிறு, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
5. பின்னர் அடுப்பில் இட்லி வாணலியில் கால் பாகம் தண்ணீர் வைத்து அதில் இட்லித் தட்டை வைத்து அதன் மீது உருண்டைகளை வைத்து நன்கு 15 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.
6. மறுபுறம் பாலைக் காய்ச்சி அதில் மீதி வெல்ல நீரை போட்டுக் கிண்டி நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் சிறிதளவு குங்குமப்பூ, ஏலப்பொடி, வேக வைத்த உருண்டைகள் இவைகளைப் போட்டு 5 நிமிடங்கள் கொதித்த பின்னர் இறக்கி விட வேண்டும்..
7. இதோ இப்போது சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
8. பின்குறிப்பு : பால் கெட்டியாக இருந்தால் மேலும் கொஞ்சமாக ஒரு கரண்டி அளவுக்குத் தண்ணீர் கலந்து கொள்ளலாம். இல்லை என்றால் அவசியம் இல்லை. அப்படியே கூட சாப்பிடலாம்..
பால் கொழுக்கட்டையின் நன்மைகள்
விற்றமின் ஏ நிறைந்த பால் கொழுக்கட்டையை குழந்தைகள் ஸ்கூலுக்கு போய்ட்டு வந்த பிறகு மாலை நேர ஸ்நாக்ஸாக செய்துக் கொடுங்கள்.. அவர்களின் உடலுக்கும் நல்லது.. கொழுக்கட்டை நல்லா ருசியாகவும் இருக்கும்.. மேலும் இந்த கொழுக்கட்டையில் பசும் பாலுக்கு பதிலாக தேங்காய் பாலை ஊற்றிக்கூட செய்யலாம்..