Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆகஸ்ட் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை மீள அள்ளுமாறு கோரி ஆடி அமாவாசை தினமான நாளைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பாரிய பள்ளங்களுக்குள், வலி. தெற்கு பிரதேச சபையினர், சட்டவிரோதமான முறையில் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கழிவுகளை கொட்டியுள்ளனர்.

கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளவேண்டும் என வலி. வடக்கு பிரதேச சபையின் 34 உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் பையெழுத்து இட்டு, வடமாகாண ஆளுநர், வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்ட செயலர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர், தெல்லிப்பழை பிரதேச செயலர் ஆகியோரிடம் கடந்த வாரம் முறையிட்டிருந்த போதிலும், இதுவரையில் காத்திரமான எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் ஆடி அமாவசை தினமான நாளைய தினம் புதன்கிழமை, குப்பைகள் கொட்டப்பட்ட பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கொட்டப்பட்ட குப்பைகளால் ஏற்படும், சூழல்சார், சமூகம்சார் பிரச்சனைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஊட்டும் நிகழ்வும் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதேவேளை, ஆடி அமாவாசை தினத்தன்று, தமது, முன்னோருக்கு பிதிர்கடன்களை நிறைவேற்ற நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கீரிமலை பகுதியில் பலர் ஒன்று கூடுவார்கள் என்றும், மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவத்தை முன்னிட்டு குறித்த பகுதியால் மாவிட்டபுர கந்தன் தீர்த்தமாட செல்வார் என்பதாலும், கொட்டப்பட்ட குப்பைகளை ஆடி அமாவசை தினத்திற்கு முன்னர், மீள அள்ள வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் குப்பைகளை அள்ள எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி முதுகெலும்புள்ள ஒரு அரசாங்கமே  கனடியர்களுக்குத் தேவை – பியர் பொய்லியேவ்ர்
அடுத்த செய்தி வடக்கில் வெள்ளத்தை எதிர்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினராக எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவு

அக்டோபர் 15, 2025
1
இலங்கை

முகமாலை இந்திராபுரத்தில் வாகன விபத்து….

மார்ச் 16, 2025
இலங்கை

கனகராயன்குளம் பகுதியில் விபத்தில் சிக்கி வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழப்பு!

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு!

ஜூலை 31, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?