Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும் – நா.வேதநாயகன்

ஜனவரி 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும். அரசாங்கப் பணியாளர்களை அதற்குத் தயார்படுத்தும் வகையில் ஐரெக் (ITEC) திட்டத்தின் ஊடான பயிற்சிகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேண்டுகோள் விடுத்தார்.

வடக்கு மாகாண அரசசேவை பட்டதாரிகள் சங்கத்தின் கோரிக்கையின்பேரில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டத்துக்கு – ஐரெக் (ITEC) – விண்ணப்பிக்கும் முறைமை தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் யாழ்ப்பாணம் கலாச்சார நிலையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் தனது உரையில்,

அரச பணியாளர்களின் சேவைகளை மேம்படுத்துவதற்கு பயிற்சிகள் அவசியமாகின்றன. காலத்துக்கு காலம் அரச பணியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்குவதும் இதற்குத்தான். எமது மாகாணத்தைச் சேர்ந்த அலுவலர்கள் ஐரெக் ஊடான பயிற்சிக்கு விண்ணப்பிப்பது குறைவாக இருந்ததாக துணைத்தூதுவர் தனது உரையில் சுட்டிக்காட்டினார். இம்முறை அதை அதிகமாக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுக்கின்றோம்.

வடக்கு மாகாண சபைக்கும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்துக்கும் இடையிலான உறவு நெருக்கமானது. அவர்கள் இவ்வாறான பயிற்சிகளை மாத்திரமல்ல எமது மாகாணத்துக்கு பல்வேறு உதவிகளையும் செய்திருக்கின்றார்கள். குறிப்பாக இன்றும் இந்திய வீட்டுத் திட்டம் என்று அவர்களால் எங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை அழைக்கின்றோம். அது எமது மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கொடை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டுவதைப்போன்று மக்களின் நம்பிக்கையை அரச சேவையாளர்கள் வென்றெடுக்கவேண்டும். அதற்கு இவ்வாறான பயிற்சிகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும், என ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சிறிசாய் முரளி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி ஆலயங்கள் நீதிமன்ற படியேறியுள்ளன – நா.வேதநாயகன்.
அடுத்த செய்தி யாழில் வன்முறையில் ஈடுபட்ட மேலும் மூவர் கைது.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மட்டக்களப்பில் வீட்டை உடைத்து 80 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்கள் திருட்டு!

செப்டம்பர் 14, 2025
இலங்கை

தேயிலை தோட்ட உற்பத்தியாளர்களுக்கு இரசாயனப் பசளைகளை வழங்கும் திட்டம் விரைவில்!

செப்டம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பில் 3 வருடமாக தலைமறைவாகி இருந்த ஒருவர் கைது

மார்ச் 21, 2026
இலங்கை

கரடியனாறு ,அம்பவத்தை பிரதேசங்களில் இரு குண்டுகள் மீட்பு.

பிப்ரவரி 13, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?