Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஆலயங்கள் நீதிமன்ற படியேறியுள்ளன – நா.வேதநாயகன்.

ஜனவரி 7, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஆலயங்கள் இப்போது சமூகசேவைக்கு செலவு செய்வதிலும் பார்க்க வழக்குகளுக்கே அதிகளவு பணத்தைச் செலவு செய்கின்றன என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் நூற்றாண்டு விழா இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

மல்லாகத்திலிருந்து அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவிலை வந்தடைந்தது. ஆலய வழிபாட்டைத் தொடர்ந்து மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன.

நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

1993ஆம் ஆண்டு காலப் பகுதியில் தெல்லிப்பழை பிரதேச செயலக உதவி அரசாங்க அதிபராக இருந்தமையை நினைவுகூர்ந்து அன்றைய நாட்களில் அம்மையாருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்புக் கிடைத்தது.

போர் மற்றும் இடப்பெயர்வுகளின்போதும் அம்மையார் சமூகப் பணிகளை திறம்பட முன்னெடுத்திருந்தார். அன்றைய காலத்தில் ஆலயங்கள் சமூகப் பணிகளை முன்னெடுக்காதிருந்த சூழலில், அம்மையார் அவர்களே அதனைத் தொடக்கி அதன் முன்னோடியாக இருந்ததார்.

இன்று ஆலயங்களில் உண்மையான கடவுள் பக்தி இல்லை. இதனால் பல ஆலயங்கள் நீதிமன்றப்படியேறியுள்ளன. புலம்பெயர் தேசங்களிலிருந்து ஆலயங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டாலும் ஆலய நிர்வாகங்கள் ஒழுங்காக கணக்கறிக்கைகள் முன்வைப்பதில்லை. இது பிரச்சினைகளுக்கு அடிநாதமாக இருக்கின்றது.

தனது காலத்தின் பின்னரும் இந்த அறப்பணிகள் தொடர்ந்தும் தடையுறாது முன்னெடுத்துச் செல்வதற்கு பொருத்தமான ஒருவரான கலாநிதி ஆறுதிருமுருகனை அம்மையார் வளர்த்து அடையாளம் காட்டியுள்ளார். அவரின் சேவைகளைப் பாராட்டுகிறேன்.

காய்க்கின்ற மரம் கல்லெறி படுவதைப்போல அவர் மீதும் பலர் விமர்சனங்களையும் குறைகளையும் முன்வைக்கின்றனரே தவிர அவர் செய்யும் சேவைகளைப் பாராட்ட முன்வருவதில்லை.

எமது சமூகத்தில் இந்த விடயம் இப்போது ஆழமாக வேரூன்றி விட்டது. ஆறுதிருமுருகன் மீதான நம்பிக்கையிலேயே புலம்பெயர் தேசத்திலிருப்பவர்களும் இங்கிருப்பவர்களும் அவர் ஊடாக உதவிகளைச் செய்ய முன்வருகின்றனர்.

இந்தச் சமூகப் பணிகள் எமது மக்களுக்கு மிக அவசியமானவை. இதை அவர் தொடரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வாழ்நாள் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை ஆகியோரும், இந்து மதக் குருக்கள், மக்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

முந்தைய செய்தி விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 மியன்மார் அகதிகளும் உறவினர்களுடன் இணைப்பு.
அடுத்த செய்தி அரச சேவையில் மக்கள் நம்பிக்கை வைக்கும் வகையில் செயலாற்றவேண்டும் – நா.வேதநாயகன்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி!

ஆகஸ்ட் 22, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தலாவ பேருந்து விபத்து 6பேர் பலி, 40ற்கு மேற்பட்டோர் படுகாயம்!

நவம்பர் 10, 2025
1
இலங்கை

மட்டக்களப்பில் பாடசாலை மாணவனை பிரம்பால் தண்டித்த அதிபருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு….

மார்ச் 15, 2025
இலங்கை

யாழில் பட்டம் ஏற்ற சென்ற இளைஞன் பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதி.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?