Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 12 மியன்மார் அகதிகளும் உறவினர்களுடன் இணைப்பு.

ஜனவரி 7, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மியன்மாரில் இருந்து வந்த அகதிபடகில் ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் என கைதுசெய்யப்பட்டு விளக்கமறியறில் வைக்கப்பட்ட 12 மியன்மார் அகதிகளும் இன்றையதினம் (07.01.2025) விடுதலையாகி கேப்பாபுலவு இடைத்தங்கல் முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக இலங்கை கடலுக்குள் நுழைந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு மியன்மார் அகதிகள் 12 பேர் சட்டவிரோத படகு பயணத்திற்கு செயற்பட்டதாக கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த12 பேரும் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கேப்பாபுலவு விமானப் படைத்தளத்திற்கு கடந்த (23.12.2024) மாலை 5 மணியளவில் மியன்மார் அகதிகள் 103 பேர் அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இன்றையதினம் தடுப்புகாவலில் வைக்கப்பட்ட ஏனைய 12 பேரும் விடுதலையாகி குறித்த முகாமிற்கு தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்பரப்பில் கடந்த 19 ஆம் திகதி 115 பயணிகளுடன் மியன்மார் அகதிகள் படகு கரை ஒதுங்கியிருந்தது. பின்னர் கப்பல் கரைக்கு வர முடியாத நிலையில் கடற்படையினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை தளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் அவர்கள் திருகோணமலை ஜமாலிய முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

பின்னர் தஞ்சம் கோரிய 115 முஸ்லீம் இனத்தினை சேர்ந்த மியன்மார் அகதிகளும் மிரிஹானை இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பதற்கான இடவசதி இல்லாத காரணத்தினால் இவர்களில் 103 பேர் இரண்டு பேருந்துகளில் மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபுலவு விமானப்படை தளம் ஒன்றில் தற்காலிகமாக தங்கவைக்க அழைத்து வரப்பட்டுள்ளனர்.

குறித்த படகில் 45 சிறுவர்கள்,24 பெண்கள்,46 ஆண்கள் உள்ளடங்கலாக 115 பேர் பயணித்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

முந்தைய செய்தி யாழில் இரு பூட்சிற்றிகளுக்கு 90 ஆயிரம் தண்டம்.
அடுத்த செய்தி ஆலயங்கள் நீதிமன்ற படியேறியுள்ளன – நா.வேதநாயகன்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நம்பி காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்கிறோம் – காணி உரிமையாளர்கள் உருக்கம்

ஏப்ரல் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு

நவம்பர் 14, 2025
இலங்கை

யாழில் குடியரசு தின நிகழ்வுகள் இடம்பெற்றது.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

மட்டக்களப்பில் வர்த்தகர் தேவகுமார் மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிவைத்தார்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?