இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் திகதி வரை இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது 16,738 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சுற்றிவளைப்பில் நாடு முழுவதும் 16,915 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 110 கிலோ 556 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 600 கிலோ 947 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 10 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டது.
மேலும் 458 கிலோ 216 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 1,015,632 கஞ்சா செடிகளும், 4 கிலோ 847 கிராம் குஷ் போதைப்பொருளும், 25 கிலோ 483 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 41,874 மாத்திரைகளும் , 36 கிலோ 176 கிராம் மாவா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் 313 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
