மகாவலி ஆற்றினை அண்டிய சில பகுதிகளில் நேற்றைய தினம் முதல் பெய்து வரும் மழையினால் அடுத்த 48 மணித்தியாலங்களில் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, மகாவலி கங்கையின் திம்புலாகலை, ஈச்சிலம்பற்று. ஹிங்குராக்கொட, கந்தளாய், கிண்ணியா, கோரளைப்பற்று வடக்கு, லங்காபுர, மெதிரிகிரிய, மூதூர், சேருவில, தமங்கடுவ, தம்பலகாமம் மற்றும் வெலிகந்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதிகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ளத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீர்ப்பாசன திணைக்களம் கேட்டுக் கொள்கிறது.