கனடாவில் பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருக்கும் இரண்டு வகை உப்புக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிரசிடன்ட்ஸ் சொய்ஸ் (President’s Choice brand)பிராண்டை கொண்ட இரண்டு வகை உப்பு உற்பத்திகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
ஹிமாலயன் பின்க் ரொக் சால்ட் (Himalayan Pink Rock Salt) மற்றும் மெடிடிரெயியன் சால்ட் (Mediterranean Salt) என்பனவே இவ்வாறு சந்தையிலிருந்து மீளப்பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
360 கிராம் எடையுடைய பக்கட்டுகளில் அடைக்கப்பட்ட உப்பு இவ்வாறு சந்தையிலிருந்து மீளப்பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருட்கள் கலந்திருந்தமையினால் இவ்வாறு உப்பு வகைகள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.