உலகப்புகழ் பெற்ற ரொக் பாடகர் ஜொன் பொன் ஜோவி பாலமொன்றின் மேலிருந்து கீழே குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண்ணைக் காப்பாற்றிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் மியூசிக் சிட்டியில் உள்ள பாலத்தில் பொன் ஜோவி தனது பாடல் ஒன்றுக்கான காணொளியை பதிவு செய்ய சென்றபோது அவரால் அந்தப்பெண் மீட்க்கப்படடார். மறுமொரு பெண்ணின் உதவியுடன் பாடகர் ஜொன் பொன் ஜோவி,உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்த அப் பெண்ணை காப்பாற்றியதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பெண்ணுடன் சிநேகபூர்வமாக உரையாடி அவரது மனநிலையை இஸ்திரப்படுத்தி அப்பெண்ணை பாதுகாப்பாக மீட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.