பிரித்தானியாவின் பல பகுதிகளில் நேற்றிரவு வடக்கு ஒளிகள் (Northern Lights) தென்பட்டதாகப் பிரித்தானிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, ஸ்கொட்லாந்து, வடக்கு அயர்லாந்து மற்றும் வடக்கு இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் இது அதிகமாகத் தென்பட்டுள்ளது.
மேலும், வடக்கு நார்ஃபோக் கடற்கரை வரையிலும் வடக்கு ஒளி தென்பட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.
அத்துடன் இந்த வடக்கு ஒளிகள் இன்று அதிகாலையும் தென்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது