காசாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் மீது இஸ்திரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐக்கியநாடுகள் சபையினால் கந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் நடத்தப்பட்டு வந்த பாடசாலை மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகவர் நிறுவனத்தின் பணியாளர்கள் 6 பேர் உள்ளடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி கொல்லப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் பணி முகவர் நிறுவன பணியாளர்களின் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.