இந்தியா உத்தரபிரதேசம் கான்பூரில் நெடுஞ்சாலையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் நிர்வாணமாக பெண்ணொருவரின் சடலம் காவல்துறையினரால் மீட்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குறித்த பெண்ணை வன்புணர்விற்கு உள்ளாக்கி தலையை துண்டித்து வீதியில் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட அந்த பெண் தொடர்பில் காவல் துறையினர் விசாரணைகளை மு௮ன்னெடுத்துள்ளனர்.அத்துடன் அப்பகுதியில் உள்ள cctv காமெராக்களில் சடலம் மீட்க்கப்பட்ட இடத்தின் அருகே,பெண் ஒருவர் நடந்து செல்வது பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.