பாகிஸ்தான் கராச்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்விபத்தில் முதலில் 7 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், 8 பேர் காயம் அடைந்ததாக அந்நாட்டு மீட்பு பணியினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர்.