இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ஒல்லி போப் சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி முதல் இரு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஒள்ளிய போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ஒட்டங்களை விளாசிய ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை படைத்துள்ளார்
இது 147 ஆண்டுக்கால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்திராத சாதனை ஆகும். இலங்கை அணிக்கு ஏதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பெற்ற ஏழாவது சதம் ஆகும்.
இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களையும் வெவ்வேறு அணிகளுக்கு ஏதிராக பெற்று முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார்.