வருடாந்த பேருந்து கட்டணம் ஜூலை மாதம் திருத்தி அமைக்கப்படவிருந்த நிலையில் , இப் பேருந்து கட்டண திருத்ததை ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன, வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஆகஸ்ட் மாதத்தில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இவ்விடயம் தொடர்பில் ஏனைய சங்கங்களுடன் கலந்துரையாடத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
