மொன்றியல் காவல்துறையானது, புதிய தெருச் சோதனை கொள்கையை நேற்று வெளியிட்டது. மொன்றியல் நகர நிர்வாகசபை, காவல்துறையின் இந்த புதிய தெருச் சோதனை கொள்கையைப் பாராட்டியுள்ளது. எனினும், இனவெறிக்கு எதிரான குழுக்களால் இக்கொள்கை கடுமையாக
விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்கை இந்த இலையுதிர்காலத்தில் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வர உள்ளது. எனினும் மொன்றியல் காவல்துறையினர் இப்போதே அக்கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
