Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

பொருட்கள், சேவைகள் மற்றும் தொழிலாளர்கள் செல்வதற்கான தடைகளை குறைக்க, ஒன்டாரியோ மற்றும் மனிடோபா அரசுகள் ஒப்புதல்!

மே 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்டாரியோ மற்றும் மனிடோபா மாகாண அரசுகள், தமது மாகாணங்களுக்கு இடையே, பொருட்கள், சேவைகள் மற்றும்  தொழிலாளர்கள் செல்வதற்கான தடைகளை குறைக்க
ஒப்புக்கொண்டுள்ளன.

கனேடிய உற்பத்திகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நெருக்கடிக்கு மத்தியில், அந்த மாகாணங்கள் இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. ஒன்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் மனிடோபாவின் முதல்வர் வாப் கினேவ் ஆகியோர் இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒன்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட்டின் அரசாங்கம் சமீபத்தில் நோவா ஸ்கோடியா மற்றும் நியூ பிரன்சுவிக் ஆகிய மாகாணங்களுடனும் இதேபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஒன்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட், கனேடிய மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தக தடைகள் தேசிய பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 200 பில்லியன் டாலர் செலவை  ஏற்படுத்துகின்றன என்றார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் வரிகளைப் போலவே, இவை கனேடியர்களுக்குள் பிரிவை உண்டாக்கி பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளுகின்றன என அவர் கூறியுள்ளார். தாம் மேலும் பிற கனேடிய மாகாணங்களுடனும் இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஒன்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்டாரியோவிலிருந்து மனிடோபாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிடோபாவிலிருந்து ஒன்டாரியோவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் கனோலா எண்ணெய் பொருட்கள் மற்றும் வழக்கமான கச்சா
எண்ணெய் முதலானவையாகும் என்பது குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி லிபரல் கட்சி அரசாங்கம் இந்த ஆண்டு முழுமையான வரவு-செலவுத் திட்டத்தை வெளியிடாது – நிதி அமைச்சர்
அடுத்த செய்தி 6,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தது மைக்ரோசொப்ட்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் அருள்மிகு திருமுருகன் கோயில் புனருத்தாரண மஹா கும்பாபிஷேகம்

கியூபெக் தமிழர் பெருவிழா & MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

ஆவா குழுவின் தலைவர் உட்பட இருவர் கைது!

நவம்பர் 12, 2025
கனடாமுதன்மை செய்தி

இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினருக்கு தேர்தலில் தடை விதிக்கப்பட்டதன் காரணம் வெளியானது …

மார்ச் 28, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடா அமெரிக்கத் தூதருக்கும் ஒன்ராறியோவின் வர்த்தகப் பிரதிநிதிக்கிடையே முரண்பாடு!

அக்டோபர் 29, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழ் தேசியத்தில் அரசியல் செய்வோரிடம் ஏமாறாதீர்கள் – டில்வின் தெரிவிப்பு

மே 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?