அமெரிக்க வரிவிதிப்புகளால் கனடாவுக்கும் அந்த நாட்டுக்குமிடையில் சுமூக உறவு சீர்குலைந்த நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள Palm Springs நகரம், கனடாவை தாம் விரும்புவதாக அறிவித்துள்ளது.
கலிஃபோர்னியாவில் அமைந்துள்ளதும் வரட்சி மிகுந்ததுமான Palm Springs நகரத்தின் பிரதான வருமான மூலமாக, சுற்றுலாத்துறை காணப்படுகின்றது.
ஆண்டுதோறும் 300,000 க்கும் அதிகமான கனேடிய சுற்றுலாப்பயணிகள் Palm Springs க்கு வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுடனான தற்போதைய முரண்நிலையில், அமெரிக்கப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும் போக்கு கனேடியர்களிடம் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையிலேயே Palm Springs நகரம் கனேடியர்களை கவர்ந்திழுக்கும் உத்தியை முன்னிறுத்தியுள்ளது.
” Palm Springs Loves Canada” எனும் வாசகம் பொறித்த பதாகைகள் மற்றும் கொடிகளை, Palm Springs நகரசபை, அந்த நகரின் பல பகுதிகளிலும் காட்சிப்படுத்தியுள்ளது.
