தேசிய சுற்றாடல் வாரத்தின் இறுதி நாளாகிய இன்று (ஜுன் 5 ) உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் விசேட நிகழ்வுகள் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
தேசியக்கொடியேற்றல் மற்றும் தேசிய கீதம் இசைத்தலுடன் இந் நிகழ்வு ஆரம்பமாகியது.
இன்றைய நிகழ்வில் மாவட்ட செயலாளரின் தலைமையுரையும் அதனைத் தொடர்ந்து அனைத்து அலுவலர்களின் சுற்றுச்சூழல் உறுதிமொழியெடுத்தல் (Environmental Pledge) நிகழ்வும் , உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர் மத்தியில் இடம்பெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவனின் பேச்சு இடம்பெற்றதோடு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
இதனை தொடர்ந்து உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பாடசாலை மாணவர் மத்தியில் இடம்பெற்ற சுவரொட்டி ஓவியப் போட்டியில் பங்குபற்றி திறமையை வெளிக்காட்டிய மாணவர்களது சுவரொட்டி ஓவியங்களின் கண்காட்சி யும் இடம் பெற்றதுடன் இறுதியாக மாவட்ட செயலக வளாகத்தில் பசுமை மரம் நடுகையும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மேலதிக மாவட்ட செயலாளர் (நிர்வாகம் ) திரு.எஸ்.குணபாலன், மேலதிக மாவட்ட செயலாளர் ( காணி )
திருஜெயகாந் , பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.சற்குணேஸ்வரன் பிரதம கணக்காளர் திரு.ரஞ்சித்குமார் , திட்டப் பணிப்பாளர் திருமதி ஜெயரஞ்சினி மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் , ஏனைய உத்தியோகத்தர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக்கொண்டனர்.