விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடிவரவு மற்றும் குடியல் கல்வி திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட மூவரையும் நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான கெஹெல்பத்தர பத்மேவுக்கு போலி கடவுச்சீட்டைத் தயாரித்து வழங்கிய குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்களின் பிணை கோரிக்கை தொடர்பிலான உத்தரவு நாளை வழங்கப்படும் எனவும் பிரதான நீதவான் தனுஜா லக்மாலி அறிவித்துள்ளார்,
