வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பின்படி, நாளை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிக பலத்த காற்று வீசுவதுடன், மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
