விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளை அளிப்பதாக, மனிடோபா மாகாண அரசு உறுதியளித்துள்ளது.
மனிடோபா மாகாண முதல்வர் Wab Kinew இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த உதவிகளூடாக, தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையிலிருந்து மனிடோபா மாகாண விவசாயிகளைக் காக்க முடியும் என தாம் நம்புவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், மனிடோபாவின் விவசாயத் தொழில்துறையில் வேலைகள் இழக்கப்படாமல் காப்பதற்கு இந்த உதவியளிப்பு துணைபுரியும் எனவும் மனிடோபா மாகாண முதல்வர் Wab Kinew கூறியுள்ளார்.
மனிடோபாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு தமது அரசு தொடர்ந்தும் வினைத்திறனுடன் பணியாற்றி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்
