Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்உலகம்

மியன்மார் மக்களுக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும்- மோடி உறுதி

மார்ச் 29, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மியன்மார் – தாய்லாந்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியன்மாரின் மண்டலே நகரை மையமாக கொண்டு நேற்று காலை 11.50 மணிக்கு ரிச்டர் அளவில் 7.7 ஆக நிலநடுக்கம் பதிவானது.

பின்னர் 12 நிமிடம் கழித்து மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் (ரிச்டர் அளவு 6.4) ஏற்பட்டது. அதே அளவுக்கு அண்டை நாடான தாய்லாந்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து நிலஅதிர்வுகள் பதிவாகின.

இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதில் ஏராளமான கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. குறிப்பாக மியன்மாரில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. தலைநகர் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 150க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினதாகவும், 700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இரவு முழுவதும் தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து மேலும் பலரின் உடல்கள் மீட்கப்பட்டன.

தற்போது மியன்மாரில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது. 1002 பேர் பலியாகி உள்ளதாகவும் 2376 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மாருக்கு உதவிகள் வழங்கப்படும் என்று இந்திய பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து இன்று இராணுவ போக்குவரத்து விமானம் மூலம் சுமார் 15 தொன் நிவாரணப் பொருட்களை மியன்மாருக்கு இந்தியா அனுப்பியுள்ளது. இதில் கூடாரங்கள், போர்வைகள், உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சூரிய விளக்குகள், ஜெனரேட்டர் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் உள்ளிட்டவைகள் உள்ளன.

இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் நாட்டின் நிலவரம் குறித்து தொலைபேசியில் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

மியன்மார் இராணுவத்தின் மூத்த ஜெனரல் மின் ஆங் ஹ்லைங்குடன் பேசியது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,

இந்த கடினமான நேரத்தில் மியன்மார் மக்களுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என உறுதி அளித்துள்ளேன்.

நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்ட செய்தியை பகிர்ந்த பிரதமர் மோடி, விரைவில் மீட்புக்குழுக்கள் மியன்மாருக்கு அனுப்பப்படும் என பதிவிட்டுள்ளார்.

ஒபரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்தியா நிவாரண உதவிகளை மேற்கொண்டுள்ளது.

முந்தைய செய்தி ஆனையிறவு உப்பளம் தொழிற்சாலை இன்று கையளிப்பு….
அடுத்த செய்தி சூரியகாந்தி விதையின் அற்புதங்கள் …..

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.பல்கலையில் வெசாக் கூடு சேதமாக்கப்பட்ட சம்பவம் – மாணவர் ஒன்றியம் வெளியிட்ட அறிக்கை

ஜூன் 2, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மின்னல் தாக்கங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நவம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

க்ளீன் ஐலண்ட் திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்

ஆகஸ்ட் 15, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழியின் இறுதி நாள் அகழ்வுப் பணிகள்

ஆகஸ்ட் 19, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?