Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

க்ளீன் ஐலண்ட் திட்டத்தின் கீழ் தெரிவான தீவுகள்

ஆகஸ்ட் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

க்ளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக, க்ளீன் ஐலண்ட் (Clean Island) திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல், யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வலுசக்தி அமைச்சின் செயலாளரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான (நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள்) திரு.ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் பொறியாளர் எஸ்.பி.சி. சுகேஸ்வர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

ஜனாதிபதி அவர்களின் கீழ் செயற்படும் க்ளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக, க்ளீன் ஐலண்ட் (Clean Island) திட்டத்தின் கீழ் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இத் திட்டத்தின் ஊடாக இத்தீவுகளை தூய்மையானதாகவும், பசுமையானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் பேணுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது, யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவுள்ள தூய்மையான தீவுகள் (Clean Island) அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் செயற்பாட்டு நோக்கங்கள் தொடர்பில் வலுசக்தி அமைச்சின் செயலாளர் திரு. ஜி.எம்.ஆர்.டி. அபொன்சு அவர்கள் விரிவான விளக்கங்களை வழங்கினார்.

இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விரிவான கருத்தாடல்கள் இடம்பெற்றன.

தீவுகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைமயமாக்கல் மற்றும் நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டு திட்டங்களை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில், மாவட்ட செயலர் ம.பிரதீபன், மேலதிக செயலர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச சபைகளின் செயலாளர்கள், நெடுந்தீவு, வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை தவிசாளர் , சமூக அபிவிருத்தி சபைத் தலைவர்கள், கடற்படை, இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி யாழில். இடம்பெற்ற இந்திய சுதந்திர தின நிகழ்வுகள்
அடுத்த செய்தி நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ். கடற்கரைகளில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மீனவ சமூகத்திற்கு அவசர விபத்து காப்புறுதி திட்டம் அறிமுகம்!

ஜூலை 30, 2025
இலங்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொதுமக்கள் குறைகேள் சந்திப்பு நெடுந்தீவில் நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 25, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் மேயர் வேட்பாளராக சுலக்சன்….

மார்ச் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?