Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவோம் கனடா பதிலடி ..!!

மார்ச் 5, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

அமெரிக்கா விதிக்கும் வரிகளுக்கு பதிலடியாக கூடுதல் வரி விதிக்கப்போவதாக கனடா அறிவித்து உள்ளது. எவ்வளவு வரி விதிக்கப்படும் என்று கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்புதான் கடுமையான பரபரப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

கனடாவின் அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிவிப்பில், எங்கள் மீது அமெரிக்கா வரி விதித்து உள்ளது. எனவே நாங்களும் பதிலடியாக அமெரிக்கா மீது வரி விதிப்போம். 155 பில்லியன் டாலர் அமெரிக்க தயாரிப்புகளுக்கு எதிராக கனடா 25% வரிகளை அமல்படுத்தும். $30 பில்லியன் மதிப்புள்ள பொருட்களுக்கு இப்போது வரி விதிப்போம். மீதமுள்ள $125 பில்லியன் பொருட்களுக்கு 21 நாட்களில் வரி விதிப்போம் என்று அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடா ஏன் அமெரிக்காவிற்கு மிக முக்கியம்

2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 2.76 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதியில் 60% ஆகும். அந்த அளவிற்கு அமெரிக்கா கனடாவை நம்பி உள்ளது. 2024 இல், கனடா ஒரு நாளைக்கு சுமார் 7.1 பில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது அமெரிக்க இயற்கை எரிவாயு இறக்குமதியில் குறிப்பிடத்தக்க அளவு ஆகும். 2022 ஆம் ஆண்டில், கனடா சுமார் 53 டெராவாட் (TWh) மின்சாரத்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. கணக்குப்படி பார்த்தால் மின்சாரம், கச்சா எண்ணெய் , இயற்கை எரிவாயு என்று அனைத்திற்கும் கனடாவையே அமெரிக்கா நம்பி உள்ளது. மெக்சிகோ மற்றும் கனடா மீது 25% வரிகளையும், சீனா மீது 10% வரியையும் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தினார். இதற்கு பதிலடியாக தற்போது அமெரிக்கா மீது கனடா கூடுதல் வரிகளை விதித்து உள்ளது.

இதற்கு பதிலடியாக அமெரிக்கா இன்னும் கடுமையான வரி விதிப்புகளை மேற்கொண்டால்.. கண்டிப்பாக அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்குவதை நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளது. அமெரிக்காவின் எரிபொருளை நம்பி நாங்கள் இல்லை. கனடாவின் எரிபொருளை நம்பித்தான் அமெரிக்கா இருக்கிறது. அப்படி இருக்க அமெரிக்கா எங்கள் மீது கூடுதல் வரியை விதிப்பது சரியாக இருக்காது. அப்படி விதிக்கும் பட்சத்தில் கனடாவின் எரிபொருளை அவர்கள் வாங்க முடியாது . மாறாக ரஷ்யாவிடம் எரிபொருள் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம். சீனா, வெனின்சுலா போன்ற நாடுகளிடம் வேண்டுமானால் எரிபொருள் வாங்கிக்கொள்ளலாம். எங்கள் மீது 25% வரி விதிக்கும் பட்சத்தில் நாங்கள் அமெரிக்காவிற்கு எரிபொருள் வழங்க மாட்டோம் என்று கனடா அறிவித்து உள்ளது.

கனடா மீது வரி: கனடா மீது 25% வரி விதித்து டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடாவின் எரிபொருட்களுக்கு 10% வரி விதித்துள்ளார். அதேபோல் மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி விதித்துள்ளார். இதற்கு கனடா மற்றும் மெக்சிகோ.. அமெரிக்காவின் பொருட்களுக்கு 25% வரி விதித்து உத்தரவிட்டு உள்ளது. கனடா மீது கூடுதல் வரிகளை விதித்தாலோ.. கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்ற அழுத்தம் தந்தாலோ.. அமெரிக்கா கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கனடா எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து விதமான மின்சாரம், எரிபொருளையும் நிறுத்துவோம் என்று கனடா தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் கனடா அமெரிக்காவிற்கு கணிசமான அளவு கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தை வழங்கி வருகிறது.

 

முந்தைய செய்தி அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டது – எதிர்க் கட்சிகள் அமளி துமளி..!!
அடுத்த செய்தி கனடாவில் தட்டம்மை நோய் குறித்து எச்சரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

திருகோணமலையில் யானை தந்தங்களுடன் இருவர் கைது

மார்ச் 31, 2026
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 7, 2025
கனடா

அமண்டா ஜாய் கூப்பர் வழக்கின் தீர்ப்பில் தாமதம்

பிப்ரவரி 19, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

ஜனவரி 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?