Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

ஜூலை 31, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

எதிர்வரும் ஆவணி 15 ஆம் திகதி நடைபெறவுள்ள மடு அன்னையின் ஆவணித் திருவிழா தொடர்பாக விசேட முதலாவது கலந்துரையாடல் இன்று (31) மாலை 3 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை பி.கிறிஸ்து நேசரத்தினம் அடிகளார் மற்றும் மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே. பெப்பி சோசை அடிகளார் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

மேலும் திணைக்கள தலைவர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், தவிசாளர்கள், திணைக்கள தலைவர்கள், கடற்படை, இராணுவம், பொலிஸ் உயர் அதிகாரிகள், வைத்தியர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் இடம்பெற்று 14 ஆம் திகதி மாலை வேஸ்பர் ஆராதனையும் அதனை தொடர்ந்து 15 ஆம் திகதி காலை 6.15 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் திருவிழா திருப்பலி கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சக்கணக்கான மக்கள் ஆவணி திருவிழாவிற்கு வருகை தர உள்ள தோடு,எதிர்வரும் மடு அன்னையின் திருவிழா காலப்பகுதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை என்பதினாலும் இம்முறை பல இலட்சக்கணக்கான மக்கள் மடு திருத்தலத்திற்கு வருகை தர உள்ளார்கள் என்பதன் அடிப்படையில் அனைத்து வித ஏற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக சுகாதாரம் , மருத்துவம், சாரணர் சேவை,கழிவு அகற்றும் நடவடிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள், குடிநீர் விநியோகம் , மின்சாரம், உணவு மற்றும் கடைகள் , போக்குவரத்து, சுற்று நீதிமன்றம் உள்ளிட்ட விடையங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன் போது கலந்து கொண்ட திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.இந்த நிலையில் எதிர்வரும் 11ஆம் திகதி காலை 11 மணிக்கு மடு திருத்தலத்தில் 2 ஆவது கலந்துரையாடலை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.

முந்தைய செய்தி அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை – கே.செல்வக்குமார்
அடுத்த செய்தி தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் – பா.உ.கந்தசாமி பிரபு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

120 பந்தய புறாக்களை இலங்கைக்கு கடத்த முயன்ற இருவர்

ஜூலை 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்திய நிபுணர் மீதான அவதூறு

ஜூன் 20, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தியாக தீபம் திலீபனின் ஊர்தி பவனி மன்னாரை வந்தடைந்தது

செப்டம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழப்பு

அக்டோபர் 10, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?