Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்முதன்மை செய்தி

அமெரிக்க குடியுரிமைக்கான ‘ தங்க அட்டை ‘ திட்டம் – டிரம்ப் அதிரடி அறிவிப்பு..!!

பிப்ரவரி 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்க அதிபராக கடந்த மாதம் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்கள் மீது கடுமையான போக்கை கொண்டுள்ளார். மேலும் ஆவணமின்றி சட்டவிரோதமாக குடியேறிய இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் மறுபுறம் தொழில்நுபட்பத்துறைக்கு திறமையானவர்கள் அமெரிக்காவுக்கு வேண்டும் என்பதால் HB1 வேலை விசாவை அதிபர் டிரம்ப் ஆதரித்து பேசினார்.

இதற்கிடையே அமெரிக்காவில் தொழில் மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) பெற அனுமதிக்கும் “LB-5” இமிக்ரன்ட் விசாவை ஒழிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டுள்ளார். LB-5 விசாவுக்கு பதிலாக அமெரிக்காவுக்கு குடியேறும் முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பணக்கார வெளிநாட்டவருக்காக டிரம்ப் தங்க அட்டை திட்டத்தை அறிவித்துள்ளார். கோல்டன் கார்டு எனப்படும் இது நிரந்தர குடியுரிமை வழங்கும் கிரீன் கார்டின் பிரீமியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து பேட்டி அளித்த அதிபர் டிரம்ப், “நாங்கள் ஒரு தங்க அட்டையை விற்கப் போகிறோம். அந்த அட்டைக்கு 5 மில்லியன் டாலர்(சுமார் 43 கோடி ரூபாய்) விலையை நிர்ணயம் செய்யப் போகிறோம்” என்று கூறினார். இந்த கோல்டன் கார்டு திட்டத்தின் மூலம் அமெரிக்காவின் கடன் சுமை குறையும் என்பது அவரது கருத்து.

மேலும் டிரம்ப் அரசின் வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் கூறுகையில், தங்க அட்டை உண்மையில் ஒரு வகையான கிரீன் கார்டாக இருக்கும். டிரம்பின் இந்த புதிய “கோல்டன் கார்டு’ திட்டம் தற்போதுள்ள EB-5 திட்டத்தை மாற்றப் போகிறது. இதன் மூலம், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அமெரிக்க வணிகங்களில் முதலீடு செய்வதன் மூலம் கிரீன் கார்டு பயன்களை பெற முடியும். ‘கோல்டன் கார்டு’ மூலம் பெறப்படும் பணம் நேரடியாக அரசாங்கத்திற்குச் செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

 

முந்தைய செய்தி மகா கும்பமேளாவில் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 66 கோடி, அடுத்த கும்பமேளா 2169 ம் ஆண்டு நடைபெறும்
அடுத்த செய்தி ஒண்டாரியோவில் 21 மோசடிக் குற்றங்களுக்காக தேடப்படும் தமிழர்..!!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இஸ்ரேலிய தாக்குதலில் அதிகமான பலஸ்தீனர்கள் பலி!

ஜூலை 17, 2025
கனடாமுதன்மை செய்தி

கலப்பட மேப்பிள் சிரப் மோசடி: போலி லேபிள் ஒட்டி விற்ற அதிர்ச்சி சம்பவம்!

ஏப்ரல் 15, 2026
இலங்கைகனடா

பிரதான செய்திகள்(video)

ஜூலை 27, 2025
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கின் வரவு செலவுத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது

டிசம்பர் 4, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?