கனடாவில் பொதுச் சுகாதார சேவைகள் தனியார்மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒட்டாவாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாராளுமன்றக் கட்டடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், பொதுச் சுகாதாரக் கட்டமைப்பைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஒன்ராறியோவின் Wawa பகுதியைச் சேர்ந்த மருத்துவர் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமான பயணம் மற்றும் இரண்டு விமானப் பயணங்களை மேற்கொண்டு தனது குடும்பத்தினருடன் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
பொதுச் சுகாதார சேவைகள் பாதுகாக்கப்பட வேண்டிய முக்கியமான ஒன்று என்பதால் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
கியூபெக்கில் தனியார் மருத்துவ நிலையங்கள் மற்றும் சில அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பிலிருந்து வெளியேறுவது போன்ற மாற்றங்கள் இடம்பெறுகின்றன.
அதேவேளை, ஒன்ராறியோவில் MRI, CT Scan, கண்புரை அறுவைச் சிகிச்சை, முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைகள் உள்ளிட்ட சேவைகளைத் தனியார் மருத்துவ நிலையங்கள் வழங்கும் போக்கு அதிகரித்துள்ளது. எனினும், இதற்கான செலவுகளைப் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பே ஏற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், அல்பேர்ட்டாவின் புதிய திட்டம் தொடர்பில் மத்திய அரசாங்கம் உடனடியாகத் தலையிட வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
