கனடாவின் 2027ஆம் ஆண்டுக்கான குடியேற்றத் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசியல் விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
2027ஆம் ஆண்டுக்கான குடியேற்றத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என கன்சர்வேட்டிவ் கட்சி முன்வைத்த எதிர்க்கட்சித் தீர்மானம், நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானத்திற்கு எதிராக 175 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், ஆதரவாக 154 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.
மத்திய அரசின் 2027–2029 குடியேற்றத் திட்டத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் 380,000 நிரந்தர குடியிருப்பாளர்களை (Permanent Residents) அனுமதிப்பதற்கான இலக்கு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, புதிய Temporary Residents வருகையை ஆண்டுதோறும் 370,000 அளவில் நிலைப்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
