வவுனியா, குருமன்காடு கலைமகள் மைதானத்தில் போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
நிகழ்வில் பிரதான ஈகைச் சுடரினை மூன்று மாவீரர்களின் தாயாரான கந்தையா தனலட்சுமி அவர்கள் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து, மலர் வணக்கத்திற்கான பொது நினைவுக்கல்லிற்கு கரும்புலி கேப்டன் நளாயினி அவர்களின் தாயாரான பழனியாண்டி காளியம்மா அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஏனைய மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள், போராளிகள் நலன்புரி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் மலர் தூவி தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
