இந்திய – இலங்கை மீனவர்களிடையே நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் உயர்மட்டப் பேச்சுவார்த்தை 2027 ஜனவரி 22ஆம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்திய – இலங்கை கடற்றொழில் கூட்டுச் செயற்குழுக் கூட்டமாக நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில், இரு நாடுகளினதும் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
இதன்போது, தமிழக மீனவர்களின் அத்துமீறிய கடற்பிரவேசம், தடைசெய்யப்பட்ட இழுவைமடி மீன்பிடி முறை மற்றும் இதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் கடல் வளங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முக்கியமாக ஆராயப்படவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல்களும் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
