மாவீரர் நாள் இறுதி நாள் நிகழ்வுகள் நாளை நவம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் கோப்பாயில் மாவீரர் நினைவாலயம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இராணுவத்தினரால் இடித்து அகற்றப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் காணப்பட்ட கல்லறைகளின் கல்வெட்டுக்கள் நினைவாகப் பாதுகாக்கப்பட்டு, அஞ்சலி செலுத்துவதற்காக நினைவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, நாளை மாவீரர் நாள் நிகழ்வுகளின்போது மாலை 6.05 மணிக்கு மணியோசையும், 6.06 மணிக்கு அகவணக்கமும், 6.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றும் நிகழ்வும் இடம்பெறவுள்ளன.
