Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் தொடரும் நகை அபகரிப்பு – குடும்ப நல உத்தியோகத்தர்கள் போராட்டம்

பிப்ரவரி 21, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மன்னார் மாவட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் ஒன்றிணைந்து இன்று சனிக்கிழமை (21) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கையில் கருப்பு பட்டி அணிந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்று மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

மன்னாரில் கடமையாற்றும் குடும்பநல உத்தியோகத்தர் ஒருவர் கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை கடமைக்கு சென்ற நேரத்தில் அவர் இடைமறிக்கப்பட்டு அவரிடம் இருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி அபகரிக்கப்பட்டதோடு, அவருக்கு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

கடமை நேரத்தில் குறித்த குடும்ப நல உத்தியோகத்தர் வழிமறிக்கப்பட்டு, உடமைகள் அபகரிக்கப்பட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் கையில் கருப்பு பட்டி அணிந்து குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இன்று சனிக்கிழமை (21) காலை 9.30 மணி அளவில் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இருந்து மன்னார் பஜார் பகுதி வரை குடும்ப நல உத்தியோகத்தர்கள் பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

பின்னர் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

பின்னர் அங்கிருந்து மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் வரை பேரணியாக சென்றனர். அங்கிருந்த உயர் அதிகாரியிடம் தமது கோரிக்கைகளை முன் வைத்து மகஜர் ஒன்றை கையளித்தனர்.

தொடர்ச்சியாக நகைப் பறிப்பில் ஈடுபடும் கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும், பெண்கள் தனியாகச் செல்லும் பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், மன்னார் நகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி மக்கள் அச்சமின்றி வாழ வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.
.
மன்னார் நகரின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் தனியாக நடமாடும் இடங்களை கண்காணித்து மோட்டார் சைக்கிளில் வரும் மர்ம நபர்களால் நகைகள் பறிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இதுவரை இவ்வாறான 4 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் பெண்கள் வீதிக்கு இறங்கி நடமாடுவதற்கு அச்சமடைந்துள்ளதோடு, தமக்கான பாதுகாப்பு இல்லை எனக் கவலை தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்தி மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே “பயங்கரவாத தடைசட்டம்”

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

தையிட்டி விவகாரத்துக்கான தீர்வு கலந்துரையாடல்…

ஏப்ரல் 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

காத்தான்குடியில் இளைஞனொருவன் மீது கத்திக்குத்து தாக்குதல்

டிசம்பர் 18, 2025
இலங்கை

நெல்லுக்கான உத்தரவாத விலையை விரைவில் அறிவியுங்கள் – பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணிவரை நீடிப்பு!

நவம்பர் 7, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?