இந்தியப் பெருங்கடல் விளிம்புச் சங்கத்தின் 25ஆவது அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று இந்தியாவின் புதுடில்லிக்குப் பயணமாகவுள்ளார்.
குறித்த கூட்டம் நாளை நவம்பர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பொருளாதார ஒத்துழைப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் நிலைபேண்தகு அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் இதில் ஆராயப்படவுள்ளன.
இக்கூட்டத்திற்கு முன்னதாக, நவம்பர் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல்களும் புதுடில்லியில் இடம்பெறுகின்றன
