தமிழர் வாழ்வியல் வரலாற்றில் உழவர்களுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக தை மாதத்தின் முதல்நாளில் தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
உழவர் திருநாளான தைத் திருநாள், மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தும் வகையில் உலகெங்கிலும் உள்ள தமிழ்ச் சமூகத்தால் கொண்டாடப்படுகின்றது.
அந்தவகையில் தைத்திருநாளில் சுரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக தமிழ் மக்கள் பொங்கல் பொங்கி படையலிட்டு வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக தைப்பொங்கல் இன்று சிறப்பாக இடம்பெற்றது
இந்த பொங்கல் நிகழ்வில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் இ.நிசாந்தன் உள்ளிட்ட பிரதேச செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
