Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் சிறிதரன் தீர்மானங்களை எடுக்கின்றார் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

ஜனவரி 19, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

சிறுபான்மை கட்சிகளின் நிலவரங்களை அறியாமல் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தீர்மானங்களை தனியாக தானாக எடுக்கின்றார். அது தவறான நடவடிக்கை என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் செய்தது தவறான நடவடிக்கை. ஆரம்பத்தில் இருந்து அவர் சிறுபான்மை கட்சிகள் சார்பான அங்கத்தவராக அரசியலமைப்பு சபையில் இருக்கின்றார்.

ஆகவே சிறிய கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் என்பவற்றின் நிலவரங்கள் என்ன என்பதை அறிநது கொண்டு அவர் அந்த இடங்களில் தீர்மானங்களை எடுக்க வேண்டும். ஆனால் அவரைப் பொறுத்தவரையில் தனியாக தானாக சில தீர்மானங்களை நிறைவேற்றுகிறார்.

அது எதிர் தரப்பில் இருக்கக் கூடிய சிறிய கட்சிகளுக்கோ, சிறுபான்மை கட்சிகளுக்கோ விரோதமான முடிவுகளாக இருக்கிறது. அது பாராளுமன்றத்தில் நிறைய விமர்சனங்களுக்கு உள்ளாகியது. அவரது கட்சியும் அதனை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது. அவரை அந்த பொறுப்பில் இருந்து விலகுமாறு அவரது கட்சி ஆலோசனை கூறியுள்ளது.

அவரது நடவடிக்கை வெறுமனே கணக்காய்வாளர் நாயகத்தை நியமிப்பது மாத்திரமல்ல. அதற்கு முன்னர் வந்த நியமனங்களில் கூட அவர் அவ்வாறு நடந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே அவர் ஏன் அவ்வாறு நடந்து கொள்கின்றார்.

ஏற்கனவே அந்த சபையில் ஆளும் தரப்பு, பிரதமர், சபாநாயகர், எதிர்கட்சி தலைவர் என 19 பேர் இருக்கிறனர். அதில் சிறுபான்மைகட்சிகள், சிறிய கட்சிகளின் உள்ளக் கிடக்கைகளை பிரதிபலிக்கக் கூடிய ஆளாகத் தான் இவர் இருக்க வேண்டும். அவர் அவ்வாறு கடந்த காலத்தில் நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மேல் சுமத்தப்பட்டுள்ளது.

ஆகவேஇ அவரது கட்சியும் அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றது. நான் நம்புறேன். அவரர் ஒரு தமிழ் தேசிய இனத்தைப பிரதிநிதித்துவப்படுத்துபவர் என்ற அடிப்படையிலும் தமிழ் தேசிய இனத்திற்கு குரல் கொடுக்கின்றவர் என்ற அடிபபடையிலும் அவர் தான் செய்த நடவடிக்கை சரியா என்பதை அவர் தான் சீர்தூக்கி பார்க்க வேண்டும்.

அதனை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவரது கட்சி வழங்கிய ஆலோசனையை கேட்பதும் கேட்காததும் அவரது விருப்பம் எனத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல்
அடுத்த செய்தி வவுனியாவில் புவனேஸ்வரி அம்மா முன்பள்ளி திறந்து வைப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

களுத்துறை பகுதியில் பல பெறுமதியான போதை பொருள் மீட்ப்பு!

நவம்பர் 5, 2025
இலங்கை

புனித லூர்து அன்னை திருத்தலத் திருவிழாவின் தேர்ப்பவணி.

பிப்ரவரி 16, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் – லசால் பகுதியில் தீ விபத்து!

ஏப்ரல் 16, 2026
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேலிய பணயக்கைதிகள் 4 பேரின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்..!!

பிப்ரவரி 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?