கொழும்பு வெல்லம்பிட்டிய பகுதியில் முன்னெடுக்கபப்ட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் இலங்கை கடற்படையும் மிரிஹான மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவும் இணைந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையில் 26 வயது நபரே கைதாகியுள்ளார்.
இந்த மின்னணு சிகரெட்டுகளை விற்பனைக்கு கொண்டு செல்ல பயன்படுத்திய மோட்டார் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் தொடர்பிலான விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

