Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

பொலிசாரை பாராட்டிய வடக்கு மாகாண ஆளுநர்

அக்டோபர் 11, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
காணி மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுத்தமையை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு வலியுறுத்தி உள்ளார்.
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர், வடக்கு மாகாணத்துக்குரிய பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், மூத்த பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோருக்கும் வடக்கின் 5 மாவட்டங்களினதும் மாவட்டச் செயலர்கள் மற்றும் ஆளுநர் இடையிலான கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

பொலிஸாரின் நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுகிறது. ஆனாலும் இன்னமும் சில பொலிஸ் நிலையங்களில் மக்களின் முறைப்பாடுகளை ஏற்க மறுகின்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய வகையில் பொலிஸாரின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
அத்துடன் பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்களால் ஏற்படும் நெரிசல்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. பாடசாலைகளுக்கு முன்பாக பொலிஸார் கடமையில் உள்ள போதும் வீதிகளில் நெரிசல் காணப்படுகிறது. அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும்.
அதேபோன்று பாடசாலைகளுக்கு அண்மையாக வீதிகளில் கனரக வாகனங்கள் தரித்து நிற்பதை தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பிரதான வீதிகளின் கரையோரங்களில் வாகனங்கள் தரித்து நிற்பதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
 பொலிஸாரின் ஒத்துழைப்பு இருந்தால் மாத்திரமே இவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
யாழ்ப்பாணத்தில் வேம்படிச் சந்தியிலுள்ள சமிக்ஞை விளக்குப் பகுதியில் பாடசாலை நேரங்களில் சமிக்ஞ்சையைக் கவனியாது பெற்றோர் மாணவர்களுடன் பயணிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் ஆபத்தானவை என்பதால் பொலிஸார் பாடசாலை நேரங்களில் இத்தகைய இடங்களில் கட்டாயம் கடமைகளில் ஈடுபடவேண்டும்.

வீதிகளில் இரவு நேரங்களில் குப்பைபோடுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு உள்ளூராட்சி மன்றங்கள் பொலிஸாரின் ஒத்துழைப்பை கோருகின்றனர்.

சுற்றாடல் பொலிஸாருடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பணியாளர்களையும் ஈடுபடுத்த தயாராக இருக்கின்றனர்., குப்பைகள் அடிக்கடி போடப்படும் பிரதேசங்களை இனங்கண்டு அந்தப் பகுதிகளில் சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இடம்பெறும் சமூகச்சீர்கேடுகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்

இதேநேரம், புகைப்பிடித்தல் பொருட்கள் விற்பனையை பகிரங்கமாக விளம்பரப்படுத்த முடியாத நிலையில், சங்கேத குறியீடுகளை வர்த்தக நிலையங்களுக்கு முன்னால் காட்சிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வேண்டும். என ஆளுநர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி அரியாலையை குப்பை மோடாக மாற்ற மாட்டோம் – நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உறுதி
அடுத்த செய்தி ஹெரோயின் போதைப்பொருளுடன் நால்வர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.மறைமாவட்ட ஆயராக பேரருட்தந்தை அன்ரன் ரஞ்சித் பிள்ளைநாயகம்

ஜூன் 30, 2026
இலங்கை

குளவிதாக்குதலுக்கு இலக்கான பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில்!

நவம்பர் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஆகஸ்ட் 21, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழர் வரலாற்று மையம் – பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பம்

மார்ச் 27, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?