Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

ஆகஸ்ட் 21, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

2026 ஆம் ஆண்டின் சிறுபோக நெல் அறுவடைகளை அரசாங்க உத்தரவாத விலையில் கொள் முதல் செய்வதற்கான வேலைத்திட்டம் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கான வட்டியற்ற கடன் வழங்கும் திட்டம் தொடர்பான விசேட கலந்துரையாடல், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (21) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் மாவட்ட விவசாயப் பணிப்பாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர் திணைக்கள அதிகாரிகள், பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர், இச் சிறுபோக அறுவடை ஆரம்பித்தது முதல் அரசாங்கத்தின் மூலம் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும்,

மேலும், மாவட்டத்தில் விவசாயிகள் தொடர்ந்து அறுவடைகளை முடித்து நெல்லை வைத்திருக்கும் நிலையில், அவர்கள் அதை விற்பனை செய்வதற்கு எதிர்பார்ப்புடன் காத்திருப்பதால் அரசாங்கத்தினால் தற்போது புதிய சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதன்படி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக வட்டியற்ற கடன்களை வழங்கி, விவசாயிகள் வைத்திருக்கும் நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்.

எனவே எமது மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லைக் கொள்வனவு செய்து, அதனைச் சேமித்து அரிசியாக்குவதற்கான வசதிகளை வைத்திருந்தால் உடனடியாக இந்தச் செயல் திட்டத்தில் இணைந்து ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச்சேவையை விரைவாக ஆரம்பிக்குமாறு அவர் வலியுறுத்தினார்.

இத்திட்டத்தின் கீழ் சந்தையில் நெல்லுக்கான நியாயமான விலையை உறுதி செய்யும் பொருட்டு 1 kg வெள்ளை நாடு நெல் 120 ரூபாவிற்கும், சிவப்பு நாடு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும் அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்யப் படவுள்ளதுடன், கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் அதிகபட்சமாக 14% ஆகவும் பதர் நெல்லின் அளவு 9%-க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

அத்துடன் நிலப்பரப்பின் அடிப்படையில் 1 ஏக்கர் வரை பயிர்செய்த விவசாயிகளிடம் இருந்து அதிகபட்சமாக 1,000 kg நெல்லும், 1 முதல் 3 ஏக்கர் வரை பயிர் செய்தவர்களிடம் 2,500 kg நெல்லும், 3 முதல் 5 ஏக்கர் வரை பயிர் செய்தவர்களிடம் 4,000 kg நெல்லும் அதிகபட்சமாக கொள்முதல் செய்யப்பட உள்ள நிலையில் நாளொன்றுக்கு அதிகபட்சம் 25 மெட்ரிக் தொன் வரை அரைக்கும் திறன் கொண்ட, மாவட்ட செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபாய் வரை வட்டியற்ற கடன் ஒதுக்கப்பட்டு, ஆரம்ப முன்பணமாக 25% விடுவிக்கப்பட்டு மீதித் தொகை 3 சம தவணைகளில் வழங்கப்படும்.

அரசினால் வழங்கப்படும் இந்நிதியை 240 நாட்களுக்குள் முழுமையாக மீளச் செலுத்த வேண்டும் என்பதுடன், தவறும்பட்சத்தில் எஞ்சிய தொகைக்கு ஆண்டுக்கு 10% வட்டி அறவிட படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும், முந்தைய அரசாங்கம் கடன்களை மீளச் செலுத்தாத ஆலை உரிமையாளர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்பட்டது.

தொடர்ந்து, தகுதியான பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களும் உடனடியாக மாவட்ட செயலகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு இச் செயற்திட்டத்தை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முந்தைய செய்தி கிளிநொச்சியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
அடுத்த செய்தி மட்டக்களப்பில் நாளை முதல் 4 மணி நேர நீர் வெட்டு அமுல்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ் பல்கலைக்கழகத்தில் இன்று நூல் வெளியீடு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடா ,இந்தியாவுடனான உறவில் மீண்டும் நெருக்கம்!

நவம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் அதிகரித்து வரும் கால்நடை திருட்டு

மே 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

பிப்ரவரி 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?