பாராளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தின் போது எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மின் கட்டணம் தொடர்பில் பேசியிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் மின் கட்டணத்தை மூன்று ஆண்டுக்குள் 30% ஆக குறைத்திடுவோம்.
மின்சாரத்தின் உற்பத்தி செலவை குறைத்தால் தான் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும்.
ஒரு யுனிட் மின்சாரத்தின் சராசரி செலவு ஏற்கனவே 37 ரூபாவிலிருந்து 29 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
எமது அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது கொள்முதல் மற்றும் உற்பத்தி செலவு 37 ரூபாயாக இருந்தது. தற்போது அதை குறைத்துள்ளோம்.
இன்னும் 25 சதவீதமாக குறைப்பதே எமது நோக்கம் அதை இம்மூன்றாட்டுக்குள் செயற்படுத்தி மின் கட்டணத்தை 30ரூபாயாக குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.



