Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார்– புத்தளம் பிரதான பாதை மூடப்பட்டால் பேரழிவு உறுதி

பிப்ரவரி 5, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

100 வருடம் பழமை வாய்ந்த புத்தளம் மன்னார் பாதையை திறந்து மக்களுக்கு இலகுபடுத்தி கொடுங்கள் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் அரசுக்கு பாராளுமன்றில் வேண்டுகோளினை முன்வைத்தார்.

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கடந்த தேர்தல்களின் போது மன்னாருக்கு வேட்பாளராக வந்த ஜனாதிபதி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த பாதையை திறந்து மக்களுக்கு வசதி செய்து கொடுப்பதாக கூறினார்.

இந்த அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கின்ற விமல் ரத்நாயக்க தொடர்பில் எம்மிடத்தில் மதிப்பிருந்தது,ஆனால் இன்று அவரது பதில் அதை உடைத்து எரிந்துவிட்டது.

இந்த அரசு கொண்டு வருகின்ற அனைத்து நல்ல விடயங்களையும் நாங்கள் நேர்மையுடன் பார்த்து வந்துள்ளதுடன்,அதற்கு எதிராக பாராளுமன்றில் நாம் பேசியதில்லை.

ஆனால் துரதிஷ்டம் தற்போது தான் புரிகிறது இந்த அரசும்,ஜனாதிபதியும்,அமைச்சர்களும், இவர்களுக்கு கீழ் வருகின்ற இரண்டு நிறுவனங்களும் இந்த புத்தளம் – மன்னார் பாதையிினை நிரந்தமாக மூடுவதற்க எடுத்துள்ள நடவடிக்கைகள்.

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச,மைத்திரிபால சிறிசேன,ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இந்த பாதை திறப்பது தொடர்பில் தூர நோக்கு சிந்தணையுடன் செயற்பட்டனர்.

கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் இது இழுத்து மூடப்பட்டது.அன்று வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் வனவிலங்கு திணைக்களம் என்பன மக்களின் பக்கம் நின்று இந்த பாதை மக்களுக்கு பயணத்திற்காக வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருந்தார்கள்.

ஆனால் இன்று இந்த அரசாங்கத்தின் கீழ் அவர்கள் வெளிநாட்டு நிதிகளை அண்டி வாழும் அமைப்புக்களுடன் இணைந்து இந்த பாதையை நிரந்தரமாக மூட ஒத்துழைப்பு நல்குவது பெறும் துரோகமும்,அநியாயமாகும்.

இந்த பாதையானது முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல என்பதை இந்த அரசு புரிந்து கொள்ள வேண்டும்.மாறாக தமிழர்களுக்கும்,அது போன்று அனைவருக்கும் பொதுவானது. அதனை திறப்பதன் மூலம் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் அனைவருக்கும் 100 கிலோமீட்டர் குறைந்த தூரத்தை கொண்டதாக இருப்பது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியிலும் இது முக்கியமானதாகும்.

அன்று நான் அமைச்சராக இருந்த போது எடுத்த முயற்சியால் இந்த பாதையினை திறந்து மக்களுக்கு பயண வசதிகள் செய்து கொடுத்தோம்.அப்போது கூட சில பெரும்பான்மை இனவாதத்தை கொண்ட சிலர் இதற்கெதிராக செயற்பட்டது மட்டுமல்லாமல் இலங்கையில் உள்ள பெரும்பான்மை ஊடகங்களும் இந்த பாதையினை மையப்படுத்தி பல்வேறு இனவாத கருத்துக்களை விதைத்தனர்.

வடக்கில் வாழும் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,மன்னார் காற்றாலை மின்சாரத்தை அமைக்க ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பை அடுத்து எம்மையும், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் அழைத்து இந்த திட்டத்தை மட்டும் நடை முறைப்படுத்த உதவுமாறு வேண்டினார்

அப்போதும் நாங்கள் தெளிவாக சொன்னோம்.மக்களின் விருப்பத்திற்கு எதிராக எதையும் செய்ய முடியாது என்று கூறியதுடன், மன்னார் – புத்தளம் பாதையினை திறந்து மக்களது அத்தியாவசிய தேவையை செய்து கொடுங்கள் என்று வலியுறுத்தினோம்.

முந்தைய செய்தி மின் கட்டணத்தை விரைவில் குறைப்போம் – எரிசக்தி அமைச்சர்
அடுத்த செய்தி நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்த முயற்சிக்கும் அர்ஜென்டீனா

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

மட்டு மகிழவெட்டுவான் யானை தாக்குதலுக்கு இழப்பீடாக ஒரு இலட்சம் ரூபா வழங்கிவைப்பு

ஆகஸ்ட் 5, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் வலயம்…

மே 13, 2025
இலங்கை

சட்டவிரோதமான முறையில் டீசலை பதுக்கி வைத்திருந்த நபர் கைது

மார்ச் 24, 2026
இலங்கை

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற பெரிய வியாழன் திருப்பலி

ஏப்ரல் 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?