Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

ஜூலை 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் இயங்கும் புகையிரதப் பாதைகளில், முன்கூட்டியே எவ்வித உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வழங்காமல் களைகொல்லி இரசாயனங்களைத் தெளித்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த களைகொல்லி இரசாயனங்களை கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN Railway) தெளித்துள்ளது. மொன்றியலின் மெர்சியர்-ஹொச்செலாகா-மைசனேவ் (Mercier–Hochelaga- Maisonneuve) பிரதேச சபைக்குட்பட்ட மெர்சியர்-வெஸ்ட் (Mercier-Ouest) பகுதியில் உள்ள விமோன்ட் மற்றும் ஸ்டீன்பெர்க் காட்டுப் பகுதிகளை ஒட்டிய புகையிரதப் பாதைகளிலேயே இந்த இரசாயனங்கள் தெளிக்கப்பட்டுள்ளன.

வீடுகளிலிருந்து சில பத்து மீட்டர்கள் தூரத்திலேயே அமைந்துள்ள இந்தப் புகையிரதப் பாதைகளில், இரசாயனம் தெளிக்கும் வாகனம் ஒன்றின் மூலம் இக் களைகொல்லி திரவம் தெளிக்கப்பட்டுள்ளது.

கனேடிய தேசிய புகையிரத நிறுவனத்தின் (CN) உத்தியோகபூர்வ இணையத்தளத் தகவல்களின்படி, அதன் பராமரிப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் டசனுக்கும் மேற்பட்ட களைகொல்லிகளில், ‘கிளைபோசேட்’ (Glyphosate) என்ற நச்சு இரசாயனமும் அடங்கும்.
மனித சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களுக்காக, மொன்றியல் மாநகராட்சி எல்லைக்குள் ‘கிளைபோசேட்’ இரசாயனப் பயன்பாட்டிற்கு, 2022 ஆம் ஆண்டு முதல் முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், புகையிரதப் போக்குவரத்துத் துறை, மத்திய அரசின் (Federal jurisdiction) அதிகார வரம்பிற்குள் வருவதால், மொன்றியல் மாநகராட்சியின் இத்தடையானது, கனேடிய தேசிய புகையிரத நிறுவனத்தைக் கட்டுப்படுத்தாது என்பது குறிப்பிடத் தக்கது.

முந்தைய செய்தி சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் இடநெரிசல் – அரசு உயர்மட்ட ஆலோசனை
அடுத்த செய்தி கியூபெக் – ஒகா பூங்கா ஏரியில் காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள் தீவிரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

இன்று இந்தியா தனது 77 ஆவது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது

ஜனவரி 26, 2026
கியூபெக்

மொண்ட்ரியலில் யூத வழிபாட்டுத் தலம் மீதான தீவைப்பு தொடர்பில் சந்தேகநபர் கைது

ஜூன் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணி மனித புதைகுழியில் இருந்து புதிதாக 07 என்புக்கூடுகள் அடையாளம்

ஜூன் 22, 2026
அண்மைய செய்திகள்உலகம்

ஜப்பானில் வெள்ளப்பெருக்கு அபாயம் ;30,000 பேர் வெளியேற்றம்

செப்டம்பர் 21, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?