Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

சிறைச்சாலைகளில் அதிகரித்து வரும் இடநெரிசல் – அரசு உயர்மட்ட ஆலோசனை

ஜூலை 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இலங்கையின் சிறைச்சாலை அமைப்பில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்குத் தீர்வு காண்பது குறித்தும், சிறைச்சாலைகளின்
கொள்ளளவை விரிவுபடுத்துவது மற்றும் மாற்றுப் பொறிமுறைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பிலும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் விஷேட உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலுள்ள ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், நாட்டின் தற்போதைய சிறைச்சாலை அமைப்பில் காணப்படும் கடுமையான இடநெரிசல் மற்றும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

சிறைச்சாலைத் துறையின் தற்போதைய நிலையை சீரமைப்பதற்காகப் பெறப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகள் இதன்போது, இலங்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

இவற்றை விரிவாகப் பரிசீலித்த இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, சிறைச்சாலைகளின் வசதிகளை விரிவுபடுத்துவதுடன், கைதிகளின் நெருக்கடியைக் குறைப்பதற்கான மாற்று வழிமுறைகளை உடனடியாகச் செயல்படுத்துவது குறித்தும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையின்படி,

இக்கலந்துரையாடலில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களும் துறைசார் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். ஆகில இலங்கை ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கைது செய்யப்படும் சந்தேகநபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சிறைச்சாலைகளில் நபர் கொள்ளளவை விடப் பல மடங்கு அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

பல்லேகலை, பள்ளன்சேனை, மஹர, வட்டரக்க மற்றும் வெலிகடை முதலான சிறைச்சாலைகளில் புதிய கட்டடத்தொகுதிகள் மற்றும் தற்காலிகத் தடுப்பு வசதிகளை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களைத் தவிர்க்கும் வகையில் வெலிசர கடற்படை முகாம் வளாகத்தில் அதிபாதுகாப்புச் சிறை வசதியொன்று இயங்கி வருகின்றது.

சிறிய குற்றங்களுடன் தொடர்புடைய கைதிகளுக்குச் சிறைத்தண்டனைக்கு பதிலாக வீட்டுக்காவல் (House arrest) முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் பிணைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்தும் இலங்கை அரசு தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

முந்தைய செய்தி சவூதி அரேபியாவுக்கு எதிராகக் கடல்வழி முற்றுகையை அறிவித்தது ஹூதி கிளர்ச்சி இயக்கம்
அடுத்த செய்தி மாநகராட்சி தடையை மீறி கனேடிய தேசிய புகையிரத நிறுவனம் (CN) மொன்றியலில் களைகொல்லி தெளித்ததால் சர்ச்சை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் 230 கிலோ கஞ்சா மீட்பு

ஜூன் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஏதும் நடந்தால் நான் பொறுப்பல்ல – அர்ச்சுனா எச்சரிக்கை!

ஜனவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

இணைய குற்ற விசாரணை பிரிவு இன்று திறந்து வைப்பு…

ஏப்ரல் 25, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை….

மே 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?