நாட்டில் சம்பா அரிசிகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் கணேஷ் விநாயகசுந்தரம் அறிவித்துள்ளார்.
பொன்னி சம்பா அரிசி ஒரு கிலோ 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 225 – 235 ரூபாய் என்ற வரையறைக்குள் குறைக்கப்பட்டுள்ளது.
கீறி சம்பா அரிசி ஒரு கிலோ 325 ரூபாவிட்கு விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 240 – 255 ரூபாய் என்ற வரையறைக்குள் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


