நாட்டில் விசேட தினங்களை முன்னிட்டு மதுபான சாலைகளை மூன்று நாட்கள் மூடுவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி வருகின்ற மே முதலாம் திகதி உழைப்பாளர் தினம் மற்றும் விசாக பூரணை தினம் என்பதால் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் வைகாசி விசாக தினம் மே மாதம் 30 ஆம் திகதி அனுஷ்டிக்க வேண்டுமென மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மே 31 ஆம் திகதி பொது விடுமுறையாக அரசாங்கம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மூன்று நாட்களே மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன.
எதிர்வரும் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் 2 ஆம் திகதி வரை “தேசிய வெசாக் வாரமாக”பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


