இன விடுதலைக்காகப் போராடிய தமிழினம் இன்று தமது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையைப் பெற்றுக்கொள்வதற்காகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கிழக்கு மாகாண கால்நடை வளர்ப்பாளர்கள் எதிர்கொள்ளும் மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட மக்கள் தமது உரிமைகளுக்காக வீதிகளில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
