உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தீவிரத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அந்நாட்டின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் கீவ் உள்ளிட்ட பகுதிகளில் எரிசக்திக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளதுடன், ஆறு இலட்சத்திற்கும் அதிகமானோர் மின்சாரமின்றிப் பாதிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலம் நெருங்கிவரும் நிலையில், மின்சார விநியோகத்தை மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, போர் நிறுத்தம் தொடர்பான சர்வதேச முயற்சிகளும் தொடர்ந்து கவனம் பெற்றுள்ளன.
