யாழ்ப்பாணம் நெடுந்தீவில் முதன்முறையாக நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான எரிபொருள் கடல் வழியாகக் கொண்டுசெல்லப்பட்டு வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளது.
இரண்டு எரிபொருள் பவுஸர்களில் ஏற்றப்பட்ட எரிபொருள், காங்கேசன்துறை இறங்குதுறையிலிருந்து பாரிய படகு மூலம் நெடுந்தீவுக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
இதுவரை எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காகக் குறிகட்டுவான் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய சிரமத்தை எதிர்கொண்ட மக்களுக்கு, இந்த நிலையம் பெரும் நிவாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளுக்கு இந்தத் திட்டம் உதவியாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
