கனடா அரசாங்கம் முன்வைத்துள்ள புதிய குடிவரவுத் திட்டத்தை நிராகரிக்க வேண்டும் என Conservative கட்சி நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளது.
இந்த முன்மொழிவு தொடர்பாக இன்று 25ஆம் திகதி புதன்கிழமை கனடா நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் Mark Carney தலைமையிலான Liberal அரசாங்கம் வெளியிட்டுள்ள குடிவரவுத் திட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. Conservative கட்சி, அரசாங்கத்தின் தற்போதைய குடிவரவுக் கொள்கையை நிராகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது.
இந்த முன்மொழிவுக்கு Bloc Québécois கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளதாக நாடாளுமன்றச் செய்தி தெரிவிக்கிறது. எனினும் Liberal கட்சிக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவு இருப்பதால், இந்த முன்மொழிவு தோல்வியடையக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்துள்ளன.
